Thursday, March 6, 2014

காத்தான்குடி சுற்றுலா பகுதி-3 (2013-10-18) அனைத்து வீடியோக்களும்

காத்தான்குடி சுற்றுலா பகுதி 3 கடந்த அக்டோபர் 18 ஆம் திகதி 2014 அன்று எமது KKG தலைவர் நிஜார்தீன் முஹம்மட் அக்ரம் மற்றும் எமது KDG தலைவர் ஆர்.பாத்திமா ரிபாஸா அவர்களினதும் தலைமயில் இடம்பெற்றது. காலை 6 மணிக்கு கெகிறாவயில் இருந்து புறப்பட்டு திருகோணமலை கிண்ணியா பகுதி வரை சென்று, அங்கிருந்து வாகரை (புதிய பாதை) வழியாக வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரை வரை சென்று அங்கு எமது நண்பர்களோடு சேர்ந்து குளித்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காத்தான்குடி நகரிற்கு செல்லப்பட்டது. அங்கு எமது நிறுவனத்தின் உரிமையாளர் முஹம்மட் பஸ்லின் அவர்களின் வீட்டில் பகல் உணவு வழங்கப்பட்டது. பின்னர் சற்று நேரம் அங்கிருந்து விட்டு, 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் தொழுது கொண்டு இருக்கும் போது சுமார் 103பேர்கள் கொல்லப்பட்ட காத்தான்குடி 1ஆம்குறிச்சி மீரா பள்ளிவாயாலை பார்வையிட சென்று, பின்னர் காத்தான்குடியின் எழில் மிக்க கடற்கரை பகுதிக்கும் சென்று அங்கிருந்து, மீண்டும் எமது பயணம் கெகிறாவை நோக்கி புறப்பட்டு சுமார் நள்ளிரவு ஒரு மணியளவில் கெகிறாவயினை வந்தடைந்தோம். இந்த சுற்றுலா அல்பம் தயாரிப்பின் போது ஏற்கனவே எமது நிறுவனத்தினால் பாடாசலை வாழ்க்கையில் வெளியிடப்பட்ட சில பழைய அல்பங்களை சிறிய சிறிய பகுதிகளாக உங்கள் பார்வைக்கு தொகுத்து தருகிறோம். பிரதான வீடியோ காத்தான்குடி சுற்றுலா பகுதி-3 அல்பமானது பாதுகாப்பு காரணம் கருதி இங்கே பிரசுரிக்கப்படவில்லை. அதனை பார்க்க விரும்பும் நபர்கள் எனது vtmfazlin@gmail.com எனும் ஈமெயிலுக்கோ அல்லது +974 302 51 51 2 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கோ தொடர்பு கொண்டு அந்த வீடியோவினை பார்க்க அனுமதி பெற்ற பின்னர் பார்வையிட முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
FZN Entertainment










No comments:

Post a Comment